விண்மீண்களற்ற வானத்தின் மிச்சமொன்று ஆசை எனும் தூண்டில் சிக்கி வதைப்பட்டு வாடியழிந்து வனவாசம் மீதொன்றில் வீழ்ந்த கதை கேளாயோ?
இப்புவியொன்றின் தொலைமிகு மூலையொயொன்றில்
மதம் பிடித்த யானையொன்று
மனம் வெதும்பி, மதி பிழறி
அன்பென்றால் என்னவென்று
அலைப்பட்டு அழுது முடங்கும்
சோர்ந்த கதை கேளாயோ?
இன்னும் வீடடையாத பறவைக்கு திறந்தவெளி எப்போதும் கம்பிகளற்ற கூடு போல்..
நாடற்று நடமாடும் வீடு நினைத்து தடுமாறும் நட்பு என்னை மறந்து, நாடகக்கனவு என நான் கண்டுணர்ந்து செல்வத்தில் நீந்தினும் அரவணைப்பற்ற அகதியாய் அழுகை மட்டும் சேர்த்து ஏது கடல் நிரப்புவேன்?